சென்னை, திருவொற்றியூர் பகுதியில் இரவு நேரங்களில் கடைகளை சேதப்படுத்தி சென்ற மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து கடையடைப்பு நடைபெற்றது.
சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டதாகக் கூறி நள்ளிரவு நேரங்களில் அதிகாரிகள் மார்க்கெட் பகுதியில் கடைகளின் முன் பகுதிகளை அகற்றியதாக கூறப்படுகிறது.
இதையறிந்த வணிகர் சங்க பேரமைப்பு சங்கத்தினர் சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பின்னர் மாநகராட்சி சார்பில் சேதங்கள் சரி செய்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது.