வயநாடு நிலச்சரிவு குறித்து ஆலோசிக்க கேரள அரசு நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து, முதலமைச்சர் பினராயி விஜயன் நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து துறைகளையும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.