வயநாட்டில் மழையின் தீவிரம் குறைந்துள்ளதால், மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படை, கடற்படை, கேரள காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் உள்ளிட்ட ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர், மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மழையின் தீவிரம் குறைந்துள்ளதால், மீட்புப்பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், எழிமலா கடற்படை பயிற்சி மையத்தில் இருந்து 60 குழுக்கள் மீட்புப்பணிக்காக சூரல்மலைக்கு வந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டறிவதற்காக மோப்ப நாய்களும், மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.