கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன், மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 2-வது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் நேரில் ஆய்வு செய்தார். இதேபோல், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து அவர் நலம் விசாரித்தார்.
நிலச்சரிவில் சிக்கி பலியானோருக்கு மேப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிரேத பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், அங்கு மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,
சமீப காலங்களில் நிகழ்ந்த பேரிடர்களில் இதுவும் ஒன்று எனவும், பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் நிலச்சரிவு குறித்த விவரங்களை எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார். மேற்கு வங்க மாநில ஆளுநர் ஆனந்த போஸ் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.