ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரிமியங்கள் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரி வணிகப் பிரிவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறுவதற்கான ஆலோசனையை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.