யுபிஎஸ்சி-யின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யுபிஎஸ்சி தலைவராக இருந்த மனோஜ் சோனி அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், மனோஜ் சோனியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாகவும், யுபிஎஸ்சி தேர்வுக்குழு உறுப்பினராக உள்ள ப்ரீத்தி சுதனை அடுத்த தலைவராக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை அல்லது 2025-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி வரை, யுபிஎஸ்சி தலைவராக ப்ரீத்தி சுதன் பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1983-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ப்ரீத்தி சுதன், மத்திய சுகாதாரத்துறை செயலாளராகவும், பாதுகாப்புத் துறை இணை செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.