தமிழகத்தை போதைப்பொருட்களின் புகலிடமாக திமுக அரசு மாற்றியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் நடமாடும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் நடமாட்டம் தலைவிரித்தாடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டம்-ஒழுங்கு தொடர்புடைய பிரச்னையில் சட்ட அமைச்சர் பதிலளிப்பது பொருத்தமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.