தென்காசி மாவட்டம், கடையம் ராமநதி அணை நிரம்பியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த 16ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது.
ராமநதி அணையில் இருந்து கார் பருவ பாசனத்திற்காக உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது பெய்துவரும் கனமழையால் அணை மீண்டும் நிரம்பியது.
இதனால், அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 100 கன அடி நீர் ராமநதியில் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.