கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய கார், மின்வாகன ஷோரூமுக்குள் புகுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.
கருங்கல் பகுதியை சேர்ந்த ஜார்ஜ், திருவனந்தபுரம் சென்றுவிட்டு தனது காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
கல்லுத்தொட்டி பகுதியில் சென்றபோது ஜார்ஜுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதில் கார் தாறுமாறாக ஓடி அங்கிருந்த மின்வாகன ஷோரூமுக்குள் புகுந்தது.
இதில் கடைக்குள் இருந்த நபர் காயமடைந்த நிலையில் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உடைந்து சேதமடைந்தன.