பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மெரினா கடற்கரையில் தூய்மை பணியாளர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
சென்னை மாநகராட்சியின் மண்டலம் எண் 5 மற்றும் 6-ஐ சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மெரினா கடற்கரையில் தூய்மை பணியாளர்கள் கடலில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் வர வேண்டும் போன்ற முழக்கங்களை எழுப்பிய தூய்மை பணியாளர்கள் கடலில் இறங்கி போராடிய நிலையில் போலீசார் கைது செய்து சமூக நலக்கூடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
மீண்டும் கடலில் இறங்கிவிடக் கூடாது என்பதற்காகக் கடலோர காவல்துறையினர் மெரினா கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
















