ஏமாற்றும் திமுக மாடலுக்குத் தமிழக மகளிர் ஏமாற்றத்தையே பரிசளிப்பர் - நயினார் நாகேந்திரன்
Oct 10, 2026, 04:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஏமாற்றும் திமுக மாடலுக்குத் தமிழக மகளிர் ஏமாற்றத்தையே பரிசளிப்பர் – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Nov 5, 2025, 02:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெற்று அறிவிப்புகள் மூலம், மகளிரை நம்ப வைத்து ஏமாற்றிய பாவம் திமுக அரசை அழிவை நோக்கி இட்டுச் செல்லும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமின் கீழ் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாகப் பெறப்பட்ட 49,429 கோரிக்கை மனுக்களில், 19,290 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது கவலையளிக்கிறது.

“விடுபட்டோர் எல்லோருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்” என்று துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் அறிவித்த இரண்டு நாட்களுக்குள்ளேயே  திமுக  அரசின் சாயம் வெளுத்துவிட்டது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் “தகுதியற்றவர்கள்” என்ற போர்வையில், சுமார் 40% மனுக்களை நிராகரித்து, நாலாப்புறமும் விளம்பரம் மட்டும் வெளியிட்டு, தமிழக மகளிரை ஏமாற்றுவது தான் உரிமைத் தொகையா முதல்வர்  ஸ்டாலின் அவர்களே?  என்று  நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பேற்று 28 மாதங்களுக்கு இத்திட்டத்தைக் கிடப்பில் போட்டது போதாதென்று, தங்கள் கணக்குப்படி “தகுதியான” மகளிர் ஒவ்வொருவருக்கும் ₹28,000 ரூபாயைத் தராமல் ஏமாற்றியது போதாதென்று, நாள்தோறும் மனு கொடுக்க கால்கடுக்க நிற்கவைத்து அலைக்கழித்தது போதாதென்று, மேடைதோறும் ஒரு போலி அறிவிப்பை வேறு வெளியிட்டு வஞ்சிப்பது ஏன்? எளியோரை ஏமாற்றி களித்தோருக்கு ஏமாற்றமே மிஞ்சும்! வெற்று அறிவிப்புகள் மூலம், மகளிரை நம்ப வைத்து ஏமாற்றிய பாவம்  திமுக அரசை அழிவை நோக்கி இட்டுச் செல்லும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: bjpMK StalinதிமுகTamil Nadu women will reward the deceptive DMK model with disappointment - Nayinar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தியா – இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம்!

Next Post

மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

Related News

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

இன்றைய தங்கம் விலை!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் – இபிஎஸ்

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies