சென்னை ஆலந்தூரில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கவர் அணிவித்ததை அடுத்து சிலையை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆலந்தூர் மெட்ரோ நிலையம் எதிரே மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உருவச்சிலையின் தலையை மர்ம நபர்கள் கவர் கொண்டு மூடியுள்ளனர்.
மேலும், சிலைக்கு கீழே மதுபாட்டில்கள், சிகரெட் அட்டைகள் என குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. ஆகவே, அண்ணாவின் சிலையை பராமரித்து, அப்பகுதியை தூய்மையாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.