சிவில் சர்வீஸ் தேர்வில் இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக பூஜா கேட்கரின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சியை யு.பி.எஸ்.சி. ரத்து செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியர் அந்தஸ்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பூஜா கேத்கர் பணியாற்றி வந்தார்.
இவர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மோசடி வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் பூஜா கேத்கர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வில் இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக அவரது ஐ.ஏ.எஸ். தேர்ச்சியை, யு.பி.எஸ்.சி. ரத்து செய்துள்ளது.
மேலும், வரும் காலங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத முடியாத வகையில் பூஜா கேட்கருக்கு நிரந்தர தடை விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.