“கேரள மாநிலம் வயநாட்டில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ஏன் அங்கு செல்லவில்லை?” என பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “வயநாட்டு பகுதியில் விமானம் செல்லாது என ராகுல் காந்தி குடும்பத்தினர் சாக்குப்போக்கு கூறி வந்த நிலையில், மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் விமானம் மூலம் சென்று, மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி துரோகம் செய்துவிட்டார்” என்றும் குற்றம் சாட்டினார்.