பார்சிலோனாவில் அதிகபட்ச வெப்பநிலையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நாட்டில் தற்போது கோடைக்காலம் நிலவி வருவதால் அதிக பட்ச வெப்பநிலையில் அந்நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர். வெப்பத்தை தணித்துக்கொள்ள நீர்நிலைகளான பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளதால் வார இறுதி வரை வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது