ராணுவத்தின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைமை இயக்குநராக பதவி ஏற்ற லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர்!
Nov 4, 2025, 12:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராணுவத்தின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைமை இயக்குநராக பதவி ஏற்ற லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர்!

Web Desk by Web Desk
Aug 1, 2024, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் பொறுப்பேற்றார்.

லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர், இன்று ராணுவத்தின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைமை இயக்குநராக பதவி  ஏற்றுக்கொண்டார்.

இந்த மதிப்புமிக்க பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, ஏர் மார்ஷல் நிலையில் மருத்துவமனை சேவைகள் (ஆயுதப்படை) பிரிவின் தலைமை இயக்குநராக பதவி வகித்த முதல் பெண் இவர் ஆவார்.

லெப்டினன்ட் ஜெனரல் நாயர் புனேயின் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். டிசம்பர் 1985 இல் ராணுவ மருத்துவப் படையில் நியமிக்கப்பட்டார். குடும்ப மருத்துவத்தில் முதுநிலை பட்டம், தாய் சேய் நலம் மற்றும் சுகாதார மேலாண்மையில் டிப்ளோமா மற்றும் புது தில்லி எய்ம்ஸில் மருத்துவ தகவலியலில் இரண்டு ஆண்டு பயிற்சி திட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

அவர் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுடன் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி போர் மற்றும் ஸ்பீஸில் உள்ள சுவிஸ் ஆயுதப் படைகளுடன் ராணுவ மருத்துவ நெறிமுறைகளில் பயிற்சி பெற்றார். இவர் மேற்கு விமான கட்டளையின் முதல் பெண் முதன்மை மருத்துவ அதிகாரி மற்றும் இந்திய விமானப்படையின் (ஐ.ஏ.எஃப்) பயிற்சி கமாண்டராகவும் இருந்தார்.

தேசிய கல்விக் கொள்கையின் மருத்துவக் கல்விக் கூறுகளின் ஒரு பகுதியை வரைவதற்காக டாக்டர் கஸ்தூரி ரங்கன் குழுவின் நிபுணர் உறுப்பினராக லெப்டினன்ட் ஜெனரல் நாயர் பரிந்துரைக்கப்பட்டார்.

அவரது பாராட்டத்தக்க சேவைக்காக, மேற்கு பிராந்திய விமான பிரிவின் ஏர் ஆபிசர் கமாண்டிங்-இன்-சீஃப் மற்றும் விமானப் படை தளபதியின் விருதுகளை அவர் பெற்றுள்ளார். குடியரசுத் தலைவரின் விஷிஷ்ட் சேவா பதக்கமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Lieutenant General Sadhana Saxena Nair appointed as Director General of Army Medical Services!
ShareTweetSendShare
Previous Post

அதிகபட்ச வெப்பநிலையால் பொதுமக்கள் அவதி!

Next Post

சண்டிகர், அசாமில் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை! –  நிதின் கட்கரி

Related News

மத்தியப் பிரதேசம் : தலைக்கு ரூ.14 லட்சம் அறிவிக்கப்பட்ட சிறுமி சரணடைந்தார்!

வாக்குப்பதிவு அலுவலர்களின் முடிவில் திருப்தி இல்லையெனில் முறையிடலாம் – நெல்லை மாவட்ட ஆட்சியர் 

தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நிறைவு!

யூரியா இறக்குமதி அதிகரிப்பு!

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள்!

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது – முதல்வர் ஸ்டாலின்

Load More

அண்மைச் செய்திகள்

சேதமடைந்த பயங்கரவாத முகாமை பார்வையிட்ட பாக். அமைச்சர்!

GEN Z-களுக்கு பிடித்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பிறந்தநாள் இன்று!

ஆம்னி பேருந்தில் தீ விபத்து – பயணிகளை உடனடியாக இறக்கிவிட்ட ஓட்டுநர்!

மோசமான நிலையில் தமிழகம் : நயினார் நாகேந்திரன்

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் – மாணவியின் நண்பரை நேரில் சென்று நலம் விசாரித்த ஏ.பி.முருகானந்தம்!

பெண்களின் பாதுகாப்பைத் திமுக அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

2025-ல் 1100 பாக். பாதுகாப்பு படை வீரர்கள் பலி?

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை : வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – டாஸ்மாக் கடையை சூறையாடிய நாதகவினர்!

முடிவெட்ட தாமதம் – ஷேவிங் கத்தியால் வாடிக்கையாளரை வெட்டிய சலூன் கடைக்காரர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies