இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 7 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்படுவதாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை முந்தைய விலையிலிருந்து 7 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது.
அதன் படி 19 கிலோ எடைக்கொண்ட வணிக சிலிண்டர் விலை ஆயிரத்து 817 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏதுமில்லை எனவும், 14 கிலோ எடை கொண்ட வீட்டு சிலிண்டர் 818 ரூபாய் 50 காசுகளாகவே நீடிப்பதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.