மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட சிக்கன் 65-ல் வண்டு இருந்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சட்டக்கல்லூரி மாணவிகள் சிலர் சிக்கன் 65 வாங்கிய நிலையில், உள்ளே வண்டு இருந்ததைக் கண்டு உணவகத்தில் புகார் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.