நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிபந்தணை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை போலி பத்திரம் தயாரித்து அபகரிப்பு செய்யப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்நிலையில் ஜாமீன் கேட்டு விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் விசாரணை செய்து நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.