பாகிஸ்தானின் ஹல்க்! : வலிமையான மனிதர் கான் பாபா!
Jul 7, 2025, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானின் ஹல்க்! : வலிமையான மனிதர் கான் பாபா!

Web Desk by Web Desk
Aug 1, 2024, 02:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹல்க், அபரிமிதமான உடல் வலிமை கொண்ட ஒரு கதாபாத்திரமாக அனைவராலும் விரும்பப் படும் ஒரு மார்வெல் சூப்பர் ஹீரோ. ஹல்க்போல ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும் ? அப்படி ஒரு அதிசய மனிதரைப் பற்றித் தான் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

ரசிகர்களால் செல்லமாக கான் பாபா என்று அழைக்கப் படுபவர் அர்பாப் கிசர் ஹயாத். வடக்கு பாகிஸ்தானில் உள்ள மர்டான் நகரைச் சேர்ந்த பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்.

உலகிலேயே மிகவும் வலிமையான மனிதர் என்று அறியப்படும் இவரின் உடல் எடை சுமார் 436 கிலோ தான்.

18 வயதாகும் போது தமக்கு உடல் எடை திடீரென அதிகரிக்க ஆரம்பித்தாகவும், வளர்ந்து வரும் உடல் எடையைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

அதிக கலோரிகள் கொண்ட உணவைக் கடைப்பிடித்து தனது உடல் எடையை மேலும் கூட்டிக் கொண்டே போகிறார் இந்த கான் பாபா.

நான்கு டஜன் முட்டைகள், நான்கு கோழிகள், மூன்று கிலோ சிவப்பு இறைச்சி மற்றும் ஐந்து லிட்டர் பால் இது தான் இவரது காலை உணவு. மேலும், ஒரு நாளைக்கு 10,000 கலோரிகளுக்கு மேல் உட்கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.

சுமார் 450 கிலோ எடையுடன் 6 அடி 3 அங்குல உயரம் கொண்ட, கான் பாபா , இதுவரை தமக்கு எந்த உடல்நலப் பிரச்சினையும் வரவில்லை என்று பெருமிதமாக கூறியிருக்கிறார்.

பெரிய எஸ்யூவி வாகனம் வைத்திருக்கும் கான் பாபாவுக்கு ,அந்த காரில் ஏறுவதும் இறங்குவதும் தான் பிரச்சனையாக இருக்கிறது.

2012 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டியில் 5,000 கிலோ எடையை தூக்கி இவர் செய்த சாதனையை இனி யாராலும் முறியடிக்க முடியாது என்று தான் சொல்லவேண்டும்.

WWE மல்யுத்தத்தைப் பார்த்து தான் வளர்ந்ததாக கூறும் கான் பாபா, WWE போட்டிகளில் கலக்கி வருகிறார்.

4 டன் ஜீப்பை அசால்ட்டாக தலை முடியால் இழுத்து உலக சாதனை படைத்தாக தெரிவிக்கும் கண் பாபாவுடன் புகைப் படம் எடுக்க , நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் பாகிஸ்தானியர்கள் கான் பாபா வீடு தேடி வருகின்றனர்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை கான் பாபாவை உலகின் மிக வலிமையான மனிதர் என்று அங்கீகரிக்கப்படுகிறார் . ஆனால் உலக அளவில் அந்த அங்கீகாரத்தை இன்னும் பெறவில்லை என்றே தெரிய வருகிறது.

சமூக வலைத்தளங்களில் கான் பாபாவுக்கு ,விமர்சனங்களும் வருகின்றன. குறிப்பாக கான் பாபா செய்யும் அசாதாரண காரியங்கள் பற்றி மக்கள் தங்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

உலகின் பயங்கரமான மனிதர் என்ற திகிலூட்டும் புனைப்பெயருக்கு சொந்தமான மார்ட்டின் ஃபோர்டு, ஈரான் நாட்டின் ஹல்க் என்று அழைக்கப்படும் சஜாத் கரிபி ஆகியோர் போல உலக நட்சத்திரமாகும் ஆசையில் இருக்கிறார் கான் பாபா .

சர்வதேச அரங்கில் கான் பாபா புகழ் பெறுவாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் .

Tags: Pakistan's Hulk! : Mighty man Khan Baba!
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்துங்கள்! – ஈரான் அதிபர்

Next Post

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீனில் விடுவிப்பு!

Related News

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies