அல்பேனியாவின் ஷெங்ஜின் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஷெங்ஜினில் குடியிருப்புப் பகுதிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால் புகைமண்டலம் உருவானதால் அப்பகுதியில் இருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து விமானங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது. இதையடுத்து சேதமடைந்த இடங்களை பார்வையிட்ட அதிகாரிகள் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.