ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலால் நாடு முழுவதும் 300 க்கும் மேற்பட்ட கூட்டுறவு மற்றும் சிறு வங்கிகளின் சேவை முடங்கியது.
இந்தியாவில் சிறிய வங்கிகளுக்கு தொழில்நுட்ப அமைப்புகளை வழங்கும் சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் என்ற மென்பொருள் நிறுவனம் ரேன்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.
இதன் காரணமாக ஏடிஎம்மில் பணம் எடுக்கவும், யுபிஐ உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் தவித்தனர்.
சி-எட்ஜ் மூலம் சேவை பெறும் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தற்காலிகமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலாது என்றும், தேசிய கட்டண உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் மென்பொருள் நிறுவனம் தெரிவித்துள்ளது.