திருப்பதி கோயில் உண்டியலில் இருந்து வெளிநாட்டுப் பணத்தை திருடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலில் தேவஸ்தான ஊழியரான ரவிக்குமார் என்பவர் சந்தேகத்திற்கிடமாக காணிக்கை கணக்கிடும் அறையில் இருந்து வெளியே வந்தார். இதைக்கண்ட தேவஸ்தான லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
அப்போது அவர் தனது மலக்குடலில் வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரவிக்குமாரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் இவர் தினமும் இதுபோல் திருட்டில் ஈடுபட்டதும் இதன்மூலம் 100 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கியதும் தெரியவந்தது.