காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2.10 லட்சம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியாதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.