நடிகர் பிரசாந்திற்கு சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள சாலையில் நடிகர் பிரசாந்த் தொகுப்பாளினி ஒருவருக்கு பேட்டியளித்தபடியே அவருடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து நடிகர் பிரசாந்த் மற்றும் தொகுப்பாளினி இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக பாண்டி பஜார் போக்குவரத்து காவல்துறையினர் அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.