வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
பூரி கடற்கரையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் மாதிரி போல் மணற் சிற்பத்தை வடிவமைத்து, உயிரிழந்தவர்களுக்கு மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், அஞ்சலி செலுத்தினார்.
மேலும், அந்த மாதிரி வடிவ நிலச்சரிவில் வயநாடு மக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.கடற்கரைக்கு வரும் பொதுமக்களும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செத்தி வருகின்றனர். அதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.