சென்னை பள்ளிக்கரணையில் சாலையை கடக்க முயன்ற போது தனியார் பள்ளி வாகனம் மோதியதில் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி உயிரிழந்தார்.
கணபதி நகரை சேர்ந்த குணாளன், ரயில்வே அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். இவர் பள்ளிக்கரணை சிவன்கோவில் எதிரே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது வேகமான வந்த தனியார் பள்ளி வாகனம், குணாளன் மீது மோதியது. இதில் குணாளன் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.