ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் சின்னாறு மீன் மார்க்கெட் அருகே மலைப்பாம்பு ஒன்று இருந்தது.
இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் 25 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை லாவகமாக பிடித்து ஒகேனக்கல் காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.