ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக பாராகிளைடிங் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட அதிகாரி கூறுகையில், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக பூஞ்ச் பகுதியில் உள்ள சங்க் தோடா முதல் நூர்பூர் மைதானம் வரை பாராகிளைடிங் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பூஞ்ச் பகுதியில் பாராகிளைடிங்கிற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறிய அவர், இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என குறிப்பிட்டார்.