மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில் கனமழை காரணமாக பேனர் சரிந்து விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தானேவில் உள்ள சகஜானந்த் சவுக்கு பகுதியில் காற்றுடன் பெய்த பலத்த மழையில் மரப்பலகையிலான விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், 3 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.