கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் மூன்று நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து அணையில் இருந்து 500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. எனவே பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால் திற்பரப்பு அருவியில் குளிக்க 3 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.