நெல்லை அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 9-ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்துள்ள விஜயநாராயணத்தில், மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே சிறிய அளவில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாங்குநேரியை சேர்ந்த அந்த மாணவர், தனது வீட்டில் இருந்து சிறிய ரக அரிவாள் ஒன்றை எடுத்து வந்து தன் மீது தண்ணீரை சிந்திய சக மாணவரை தலையில் வெட்டிவிட்டு தப்பித்து சென்றுவிட்டார்.
காயமடைந்த மாணவர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.