அடுத்த ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலரை சேமிக்கும் நோக்கில், சுமார் 15 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து விடுவிக்க இன்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஊழியர்களுக்கு இன்டெல் சிஇஓ கால்சிங்கர் அனுப்பிய மெமோவில், கடினமான சூழலில் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் இன்டெல் நிறுவனத்திலிருந்து சுமார் 15 சதவீத ஊழியர்கள், வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் இந்த முடிவு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.