வேலூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இருவேறு இடங்களில் பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சாலையின் 7வது கொண்டை ஊசி வளைவில் சென்றுகொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் செந்தில் உயிரிழந்த நிலையில் அவருடன் பயணித்த நந்து என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.