மேட்டுப்பாளையம் – உதகை இடையே உள்ள ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஹில்கிரோ ஆடர்லி ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த மண்சரிவால் தண்டவாள சீரமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சீரமைப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில் சேவை ரத்து அறிவிப்பு தொடர்ந்து நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.