இஸ்ரேலுக்கான விமான சேவையை ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை ரத்து செய்வதாக ஏர் இந்தியா விமான சேவையை இயக்கும் டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரிலிருந்து இந்தியாவுக்கான ஏர் இந்தியா விமான சேவையை ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அதை நிர்வகிக்கும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.