வயநாட்டில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 330-ஐ தாண்டியது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சூரல்மலை, முண்டக்கை, மேம்பாடி ஆகிய கிராமங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 330க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அனைத்து இடங்களும் சேறும், சகதியும் நிறைந்து காணப்படுவதால் மீட்புப் பணி பெரும் சவாலாக உள்ளது.
நிலச்சரிவால் முண்டக்கை மற்றும் சூரல்மலை கிராமங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முண்டக்கை பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக சூரல்மலை பகுதியில் 140 ராணுவ வீரர்கள் சேர்ந்து 31 மணி நேரத்தில் 190 அடி நீளத்திற்கு பெய்லி பாலம் அமைத்துள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.