விரைவில் இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் : சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
Aug 19, 2025, 06:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விரைவில் இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் : சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

Web Desk by Web Desk
Aug 3, 2024, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 22ஆம் தேதி கச்சத்தீவு பகுதியில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இது தொடர்பாக மீனவர் பாதுகாப்பு அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீனவர்கள் உயிரிழப்பதும் அடிக்கடி நடந்து வருவதாகவும், இதனை தடுக்க இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் வாதிட்டார்.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் எட்வின் பிரபாகர், மீனவர்கள் கைது சம்பவங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் நடவடிக்கையால் அவ்வப்போது விடுவிக்கப்படுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து வாதிட்ட அவர், மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண, இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை விரைவில் நடத்தி, இது சம்பந்தமாக விவாதிக்க உள்ளதாகவும் விளக்கமளித்தார்.

இறுதியாக அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் வாதத்தைப் பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

Tags: chennai high courtsri lankan navyfisherman issueIndia-Sri Lanka Joint Action Committee meeting
ShareTweetSendShare
Previous Post

ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம் : அண்ணாமலை வாழ்த்து!

Next Post

ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த தீரன் சின்னமலை : மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

Related News

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

“ஓ காட் பியூட்டிபுல்” படத்தின் 2வது பாடலின் அறிவிப்பு!

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து : மத்திய அரசு

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தே.ஜ. கூட்டணியில் அமோக ஆதரவு – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆன்லைன் தரிசன வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும் : பக்தர்கள் கோரிக்கை!

இபிஎஸ்-க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் : மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies