இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு வான்வழி தாக்குதல் நடத்தியது.
லெபனானில் அண்மையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா தளபதி ஃப்வாட் ஷுகர் உயிரிழந்தார். இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தைக் குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு வான்வழி தாக்குதல் நடத்தியது.
ஆனால் லெபனான் அரசின் துணையோடுதான் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதாக கூறிய இஸ்ரேல், தக்க பதிலடி கொடுப்போம் என சூளுரைத்துள்ளது.