விடுதலைப் போரில், மாவீரர் தீரன் சின்னமலையுடன் இணைந்து போராடி, தாய்நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த வீரன் குணாளன் நாடார் நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில், அவரது திருவுருவப் படத்துக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இளைஞர்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியவர். வீரத்தையும் இரக்கத்தையும் ஒருங்கே பெற்றிருந்தவர். கட்டுத்தடிக்காரன் என்று அன்போடு அழைக்கப்படும் வீரன் குணாளன் நாடார், புகழைப் போற்றி வணங்குகிறோம்.
நிகழ்ச்சியில், நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் பொன் விஸ்வநாதன், தமிழக பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள், மற்றும் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.