கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பாதிப்புக்குள்ளான முண்டக்கை பகுதியை நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்.
வயநாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 3 கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்ததில் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள நடிகர் மோகன்லால் 3 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தார். மேலும் பாதிப்புக்குள்ளான முண்டக்கை பகுதியை ராணுவ உடையில் அவர் நேரில் பார்வையிட்டார்.
மோகன்லால் டெரிடோரியல் ஆர்மியில் லெப்டினன்ட் கர்னலாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ராணுவ சீருடையில் சென்ற மோகன்லால், டெரிடோரியல் ஆர்மியின் அடிப்படை முகாமை சென்றடைந்ததும் அங்குள்ள வீரர்களிடம் கள நிலவரம் பற்றி கேட்டறிந்தார்.