சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி அகற்றியதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உணவகங்கள் உட்பட ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடல் மட்டத்திலிருந்து 20 மீட்டர் தொலைவிற்குள் உள்ள கடைகளை ஆக்கிரமிப்பு எனக் கூறி, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பின்றி கடைகளை அகற்றியுள்ளதால், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எந்தவித மாற்று ஏற்பாடும் செய்யாமல் கடைகளை அகற்றியுள்ளதால், தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், வியாபாரிகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.