பிரதமர் மோடியை மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அண்மையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிமக்ப்பட்டார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், நமது அன்புக்குரிய மக்கள் தலைவரைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், .
மகாராஷ்டிராவின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அவரது வழிகாட்டுதலுக்கு நன்றி என சிபி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.