விருகம்பாக்கம் பகுதியில் சென்னை நாணயவியல் கழகத்தின் சார்பில் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
தனியார் மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளில் உள்ள பழங்கால நாணயங்கள், பணத்தாள்கள், முத்திரைகள் உள்ளிட்டவை காட்சிபடுத்தப்பட்டன. மேலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறப்பு மிக்க பொருட்களும் இதில் இடம் பெற்றுள்ளது.
சென்னை நாணயவியல் கழக தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் ஏராளமான நாணய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சியில் 32 வருடங்களாக நாணய சேகரிப்பில் ஈடுபட்ட சுரேஷ்பாபு என்பவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.