திருச்சியில் காவிரி ஆற்றின் அருகே கல்லூரி மாணவர் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் கண்ணன், திருச்சி காஜாமலையில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை படிப்பு பயின்று வந்தார். இந்நிலையில் ஸ்ரீரங்கம் கண்பதி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற ரஞ்சித், வீட்டுக்கு அருகே ஓடும் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றுள்ளார்.
அப்போது அங்கு மதுஅருந்திக் கொண்டிருந்த சிலர், ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரஞ்சித் கண்ணன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.