வயநாட்டில் தொடரும் மீட்பு, நிவாரணப்பணி : களத்தில் தீவிரமாக பணியாற்றும் ராணுவ வீரர்கள்!
Aug 15, 2025, 03:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாட்டில் தொடரும் மீட்பு, நிவாரணப்பணி : களத்தில் தீவிரமாக பணியாற்றும் ராணுவ வீரர்கள்!

Web Desk by Web Desk
Aug 3, 2024, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு அமைப்புகளுக்கு மத்தியில், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய கடற்படை மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை முழு வீச்சில் தீவிரமாகத் தொடர்கிறது.

நிவாரண முயற்சிகளை அதிகரிக்கவும், பேரழிவால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களுக்கு ஆதரவளிக்கவும் கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது 78 கடற்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுக்கள் சூரல்மலா, முண்டக்கை பகுதிகளின் பல இடங்களில் பணியில் ஈடுபடுகின்றனர்.  மேலும் பேரிடர் நிவாரணப் படையினர், உள்ளூர் நிர்வாகத்துடன் கைகோர்த்து செயல்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், உணவு மற்றும் இதர பொருட்களை தொடர்ந்து வழங்குவதற்காக ஒரு குழு செயல்படுகிறது.

மற்ற குழுக்கள் பிழைத்தவர்களைத் தேடுதல், இடிபாடுகளை அகற்றுதல், உடல்களை மீட்டெடுக்கும் பணி போன்றவற்றில் ஈடுபடுகின்றது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக சூரல்மலாவில் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.

30 மாலுமிகளைக் கொண்ட ஒரு குழு, 2024 ஆகஸ்ட் 01 அன்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலா, முண்டக்கை பகுதிகளை இணைக்கும் ஆற்றின் மீது முக்கியமான பெய்லி பாலத்தை நிர்மாணிப்பதில் இந்திய ராணுவத்திற்கு உதவியது. கனரக இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்களின் இயக்கத்திற்கு உதவும் போக்குவரத்தின்  முதுகெலும்பாக இந்தப் பாலம் செயல்படுகிறது.

02 ஆகஸ்ட் 24 அன்று, கோழிக்கோட்டில் இருந்து இயக்கப்படும் ஐஎன்எஸ் கருடாவின் இந்திய கடற்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ஏஎல்எச்) பாதிக்கப்பட்ட பகுதிகளில் வான்வழி மீட்புப் பணியை மேற்கொண்டது.

சிக்கித் தவிக்கும் மக்களை விரைவாக வெளியேற்றுதல், அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்திய கடற்படை உள்ளூர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

Tags: kerelawayanadu landslidewayanadu rescue operationindia miltary rescue operation
ShareTweetSendShare
Previous Post

திருச்சியில் கல்லூரி மாணவர் அடித்துக்கொலை : 5 பேர் கைது!

Next Post

ஆகஸ்ட் 9 முதல் 15 வரை வீடுகளில் அனைவரும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் : உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள்

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies