கடைமடை சென்ற காவிரி நீரை நீர்வளத்துறை அதிகாரிகள் மலர்தூவி வரவேற்றனர். கடந்த 28ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது.
கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இரவு மயிலாடுதுறை மாவட்ட எல்லை சென்றடைந்தது. குத்தாலம் தாலுகா சென்ற காவிரி நீருக்கு நீர்வளத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்தனர்.
இதனைத்தொடர்ந்து முதல் கதவணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 100 கன அடி நீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டது. நீர்திறப்பால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 48 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.