ஆடி அமாவாசை - பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
Sep 5, 2026, 11:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆடி அமாவாசை – பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

Murugesan M by Murugesan M
Aug 4, 2024, 01:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் நீர் நிலைகளில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு நடத்தினர்.

ஆடி அமாவாசையையொட்டி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோயில் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார். மேலும், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். ஆடி அமாவாசையையொட்டி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம், அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். காவிரி கொள்ளிடம் கரையோரங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

கன்னியாகுமரி கடலில் அதிகாலை 2 மணி முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். குழித்துறை தாமிரபரணி நதிகரையில் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் பாபநாச நாதர் சுவாமி கோயில் படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு நடத்தினர். இதே போன்று, வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Tags: Aadi Amavasai - Devotees bathe in holy water and offer darpanam to their ancestors!
Share
Tweet
SendShare
Previous Post

கடைமடை வந்த காவிரி நீரை வரவேற்ற நீர்வளத்துறை அதிகாரிகள்!

Next Post

ஏலியனுக்கும் சிலை அமைத்த நபருக்கு கொலை மிரட்டல்!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies