சேலத்தில் ஏலியனுக்கு சிலை அமைத்தவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மல்லமூப்பம்பட்டியைச் சேர்ந்த பாக்யா என்பவர் தனது சொந்த இடத்தில் ஏலியனுக்கும் அகத்திய முனிவருக்கும் சிலை அமைத்தார். இந்த சம்பவம் வைரலான நிலையில் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகளையும் அவர் செய்து வந்தார்.
இந்நிலையில் பாக்யாவை தொடர்புகொண்ட மர்ம நபர்கள் ஏலியனுக்கு சிலை வைத்ததை கண்டித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாக்யா காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.