ஐ.பி.ஓ ஆவணங்களை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பதற்கு ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த செபி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக ஒரு புதிய ஆவண முறையை செபி உருவாக்கி வருகிறது. தொழில்துறை அமைப்பான எஃப்.ஐ.சி.சி.ஐ நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய செபி தலைவர் மாதபி பூரி புச், டிசம்பர் மாதத்துக்குள் இந்த ஏ.ஐ கருவி தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் ஐ.பி.ஓ நடவடிக்கையை எளிதாக்குவதே இந்தத் தொழில்நுட்பத்தின் நோக்கம் எனவும் மாதபி தெரிவித்துள்ளார்.